தோனியின் 6 ஆண்டுகள் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

#IPL2019: #RishabhPant breaks #MSDhoni's record of fastest fifty | மும்பை அணிக்கு எதிராக இளம் வீரர் ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்களை அடித்து நொறுக்கினார்.

news18
Updated: March 25, 2019, 1:55 PM IST
தோனியின் 6 ஆண்டுகள் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!
அதிவேக அரைசதம் அடித்த ரிஷப் பண்ட். (DC)
news18
Updated: March 25, 2019, 1:55 PM IST
ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த இளம் வீரர் ரிஷப் பண்ட், தோனியின் சாதனையை முறியடித்தார்.

ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, இளம் வீரர் ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்களை அடித்து நொறுக்கினார். அதில், தலா 7 சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார்.

Rishabh Pant, ரிஷப் பண்ட்
அதிரடி காட்டிய ரிஷப் பண்ட். (DC)


இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற தோனியின் சாதனையை முறியடித்தார். 2012-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோனி 20 பந்துகளில் அரைசதம் விளாசியிருந்தார்.



தற்போது, 18 பந்துகளில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், 6 ஆண்டுகளாக தோனி வைத்திருந்த சாதனையை முறியடித்தார். ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்தவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் முதல் இடத்தில் உள்ளார். அவர் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

VIDEO: ரிஷப் பண்ட் அடித்த துல்லியமான ஹெலிகாப்டர் ஷாட்!

VIDEO: ஐ.பி.எல் போட்டியில் பும்ராவுக்கு காயம்... உலகக் கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல்?

#IPL2019: சுரேஷ் ரெய்னா முதல் ரிஷப் பண்ட் வரை சில சுவாரஸ்யமான செய்திகள்

Also Watch...

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...