MIvDC | மும்பை அணியை மிரளவைத்த ரிஷப் பண்ட்!

#MIvDC | #RishabhPant ரிஷப் பண்டின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணியினர் திணறினர்.

news18
Updated: March 24, 2019, 10:17 PM IST
MIvDC | மும்பை அணியை மிரளவைத்த ரிஷப் பண்ட்!
#MIvDC | #RishabhPant ரிஷப் பண்டின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணியினர் திணறினர்.
news18
Updated: March 24, 2019, 10:17 PM IST
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 213 ரன்களை குவித்தது. 

மும்பை வாண்கேடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சார்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரிதிவ் ஷா 7 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் சிரியாஸ் ஐயர் 16 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். பொறுப்புடன் விளையாடிய தவான், இங்கராம் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். தவான் 43 ரன்களும், இங்கராம் 47 ரன்னிலும் அவுட்டாகினர்.

டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்டின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணியினர் திணறினர். ரிஷப் பண்ட் வெறும் 27 பந்துகளில் 7 சிக்சர், 7 பவுண்டரிகள்  உடன் 78 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 213 ரன்கள் குவித்தது.
First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...