#RCBvKKR | தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா பெங்களூரு? இன்று கொல்கத்தா உடன் மோதல்!

#IPL2019, #RCBvsKKR Preview | 2017-ல் இருந்து இதுவரை 4 முறை மோதியுள்ளன. அனைத்திலும் பெங்களூரு தோல்வி அடைந்தது.

news18
Updated: April 5, 2019, 1:47 PM IST
#RCBvKKR | தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா பெங்களூரு? இன்று கொல்கத்தா உடன் மோதல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. (BCCI)
news18
Updated: April 5, 2019, 1:47 PM IST
ஐ.பி.எல் தொடரில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் வெற்றி தாகத்தை தீர்க்குமா என அந்த அணியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் களைகட்டி வரும் 12-வது சீசன் ஐ.பி.எல் தொடரில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. அந்த அணி மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்தது.

இதனால், பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக சாதிக்கும் கோலிக்கு, ஐ.பி.எல் போட்டி கடும் சவால் அளிக்கிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

Virat Kohli,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி. (Twitter)


பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறையிலும் பெங்களூரு அணி மோசமாக உள்ளது. அதிலும், அந்த அணியின் வெற்றிக்கான 11 பேர் அணியை தேடி பிடிப்பதே கடினமாக உள்ளது.

மறுபுறம், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி தொடரை சிறப்பாக தொடங்கியது. ஹைதராபாத், பஞ்சாப் அணிகளை வீழ்த்திய நிலையில் டெல்லி அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வி கண்டது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா அணி உள்ளது.

வெற்றி vs தோல்வி விகிதம்:
Loading...
இதுவரை, இரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 9-ல் பெங்களூருவும், 13-ல் கொல்கத்தாவும் வென்றுள்ளன. 2017-ல் இருந்து இதுவரை 4 முறை மோதியுள்ளன. அனைத்திலும் பெங்களூரு தோல்வி அடைந்தது.

இன்றைய போட்டியில் பெங்களூரு வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

ஃபோட்டோவை கிழித்த ஆண்டர்சன்... பதிலடி கொடுத்த அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...