தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

#RajasthanRayols Player Got #Dhoni's Autograph | 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய தல தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. #CSKvRR

news18
Updated: April 1, 2019, 12:24 PM IST
தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி கிரிக்கெட் வீரர். (CSK)
news18
Updated: April 1, 2019, 12:24 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்ற பிறகு தல தோனியிடம், பிரபல கிரிக்கெட் வீரரே ஆட்டோகிராஃப் வாங்கியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் அரைசதம் கடந்த தோனி, கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி, உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைந்தார்.

Loading...
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

46 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய தல தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. போட்டி முடிந்த பிறகு, சென்னை - ராஜஸ்தான் வீரர்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். அதேபோல், அந்த அணியில் இருக்கும் 17 வயதேயான இளம் வீரர் ரியான் பாராக், தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அப்போது, ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம், தோனியிடம் தனது பேட்டில் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார். கிரிக்கெட் வீரர் ஒருவரே தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய நிகழ்வு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தோனியை அவுட்டாக்கமாட்டேன்... அடம்பிடித்த பந்து!

Also Watch...

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...