• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • #CSKvDC | சி.எஸ்.கே அணியில் 2 முக்கிய மாற்றம்? சென்னை ரசிகர்கள் உற்சாகம்!

#CSKvDC | சி.எஸ்.கே அணியில் 2 முக்கிய மாற்றம்? சென்னை ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)

#IPL2019: #Raina Plan To Make Two Important Changes In #CSK XI Vs #DC | முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இரு அணியும் இந்தப் போட்டியில் வெற்றி பெற போராடும். #CSKvDC

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 முக்கியமான மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

    சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பில்டஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

    நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. அனைத்து அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், டெல்லி கேப்பிடல்ஸ், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

    முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இரு அணியும் இந்தப் போட்டியில் வெற்றி பெற போராடும்.

    CSK Team
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (Twitter)


    கேப்டன் தோனி இல்லாமல் சென்னை அணி தவித்து வருகிறது. 2 நாட்களாக அவர் பயிற்சி செய்யவில்லை என்பதால், இன்றைய போட்டியில் தோனி பங்கேற்பது சந்தேகம்தான். கடந்த போட்டியில் சரியாக விளையாட துருவ் ஷோரே தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை. அதனால், அவர் நீக்கப்படலாம்.

    இதுதவிர, கடந்த போட்டியில் இடம்பெறாத தொடக்க வீரர் டூ ப்ளெசிஸ், ஜடேஜா ஆகியோர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகின. இதனால், இருவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    சி.எஸ்.கே உத்தேச லெவன் அணி: ஷேன் வாட்சன், டூ பிளெசிஸ் / முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், மிட்செல் சாண்ட்னெர் / பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

    கம்பீர், பாதுகாப்பற்ற பலவீனமான மனநிலையை உடையவர்: முன்னாள் பயிற்சியாளர் பகீர் தகவல்!

    ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் திடீர் விலகல்... பஞ்சாப் அணிக்கு புதிய சிக்கல்!

    ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் ஸ்மித்... ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான்...?

    ஐ.பி.எல் போட்டியில் விளையாட பஞ்சாப் அணிக்கு தடையா? வெளியானது பரபரப்பு தகவல்!

    Also Watch...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: