#CSKvDC | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய மாற்றம்? டெல்லியை வீழ்த்த புதிய திட்டம்!

#IPLQualifier2: #MSDhoni Plan To Make Change in #CSKvsDC | தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டூ பிளெசிஸ் ஆகிய இருவரும் கூட்டாக ரன் சேர்க்க தவறுகின்றனர். #CSKvDC

#CSKvDC | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய மாற்றம்? டெல்லியை வீழ்த்த புதிய திட்டம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)
  • News18
  • Last Updated: May 10, 2019, 6:10 PM IST
  • Share this:
இன்று நடைபெறும் 2-வது குவாலிஃபயர் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்த சி.எஸ்.கே கேப்டன் தோனி முக்கிய மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

2-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

IPL, Mumbai Indians
சென்னையை வீழ்த்திய இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை. (BCCI)இதனை அடுத்து, விசாகப்பட்டினத்தில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபயர் 2) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது.

DD vs CSK IPL 2012
டெல்லி vs சென்னை


இன்றைய போட்டியில் டெல்லி அணியை வீழ்த்த சி.எஸ்.கே கேப்டன் தோனி முக்கிய மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார். தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டூ பிளெசிஸ் ஆகிய இருவரும் கூட்டாக ரன் சேர்க்க தவறுகின்றனர். யாராவது ஒருவர் மட்டுமே நன்றாக விளையாடுகிறார்கள்.கடந்த போட்டியில், காயத்தால் விலகிய கேதர் ஜாதவிற்கு பதிலாக முரளி விஜய் களமிறக்கப்பட்டார். அவர் 26 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். அதனால், அவர் அணியில் தொடர வாய்ப்புள்ளது.

வீரர்களை மாற்றம் செய்யாமல் களமிறங்கும் வரிசையை மாற்ற வாய்ப்புள்ளது. விக்கெட் இழப்பை கட்டுப்படுத்த முரளி விஜய் தொடக்க வீரராக களமிறக்கலாம். இதுதவிர வேறு மாற்றங்கள் செய்ய வாய்ப்புகள் குறைவுதான்.

சி.எஸ்.கே உத்தேச லெவன் அணி:

முரளி விஜய், ஷேன் வாட்சன், டூ ப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

ஊழல் சர்ச்சை: அடுத்தடுத்து நீக்கப்படும் இலங்கை வீரர்கள்.. சர்வதேச கிரிக்கெட் பரபரப்பு!

கவுதம் காம்பீர் அப்படிப்பட்டவர் இல்லை... ஹர்பஜன் சிங், விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆதரவு!

இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்... குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் தேர்வாக வாய்ப்பு!

ஆஸி. வீரர்களை மோசமாக விமர்சித்த இங்கிலாந்து ரசிகர்கள்... வைரலாகும் ட்வீட்கள்!

2012 ஐ.பி.எல் வரலாறு மீண்டும் திரும்புமா? இன்று டெல்லியை எதிர்கொள்ளும் சி.எஸ்.கே!

நோன்பு இருந்தபோதும் விளையாடிய ஐ.பி.எல் வீரர்கள்... சீக்ரெட் உடைத்த ஷிகர் தவான்!

#IPLQualifier2: வேட்டைக்குத் தயாராகும் கர்ஜிக்கும் சிங்கங்கள்!

VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!

VIDEO | அதிசய முறையில் அவுட்டான டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா!

இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading