நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய வியூகம் வகுத்துள்ளது.
12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றன. ஆனால், நடப்பு சீசனில் 2 லீக் போட்டிகளிலும் மும்பையிடம் சென்னை அணி தோல்வி அடைந்தது. அதனால், இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில், காயம் காரணமாக ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் விலகியது சென்னை அணிக்கு கூடுதல் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதனால், அணியில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய தோனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஜாதவின் இடத்தை நிரப்பப்போவது யார் என்ற குழப்பம் உள்ளது. தொடக்க வீரர் முரளி விஜயை களமிறக்கி, வாட்சனை அடுத்த இடத்தில் இறக்கலாமா? இல்லை.. த்ரூவ் ஷோரேவை மிடில் ஆர்டரில் களமிறக்கலாமா? என்ற யோசனையில் தோனி இருக்கிறார்.
சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு கண்டிப்பாக களமிறங்க வாய்ப்புள்ளது.
சி.எஸ்.கே உத்தேச லெவன் அணி:
ஷேன் வாட்சன், டூ ப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, துரூவ் ஷோரே, எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.
ஐ.பி.எல் போட்டியில் அதிரடி.. வெ., இண்டீசில் கெய்லுக்கு புதிய பதவி!
மும்பை அணிக்கு நன்றி சொன்ன ஹைதராபாத் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?
ஒரே இரவில் எதுவும் செய்யமுடியாது... எனக்கு 21 வயதுதான் ஆகுது... அவசரப்படாதீங்க: ரிஷப் பண்ட்!
#CSKvMI | இறுதிப் போட்டிக்குச் செல்வது யார்? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை!
சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!
நாங்களும் விளையாடுவோம்... பெண்கள் டி 20 தொடரில் 90 ரன்கள் விளாசிய மந்தனா
VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?
ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்
Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Super Kings, Cricket, CSK, Hardik Pandya, IPL 2019, Kedar Jadhav, MS Dhoni, Rohit sharma