#IPL2019: சி.எஸ்.கே.வுக்கு யோயோ டெஸ்ட் தேவையில்லை... பயிற்சியாளர் பிளெமிங் அதிரடி பேட்டி!

#IPL2019: No #YoYoTest for #CSK to prove fitness - #StephenFleming | யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியாது.

news18
Updated: March 22, 2019, 1:35 PM IST
#IPL2019: சி.எஸ்.கே.வுக்கு யோயோ டெஸ்ட் தேவையில்லை... பயிற்சியாளர் பிளெமிங் அதிரடி பேட்டி!
தலைமை பயிற்சியாளர் பிளெமிங் (இடது). (CSK)
news18
Updated: March 22, 2019, 1:35 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யோ யோ டெஸ்ட் தேவையில்லை, அதைவிட சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது என பயிற்சியாளர் பிளெமிங் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல்) நாளை (மார்ச் 22) சென்னையில் தொடங்க உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்காக பெங்களூரு அணி வீரர்கள் நேற்று (மார்ச் 21) சென்னை வந்து சேர்ந்தனர்.

Loading...
இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யோ யோ டெஸ்ட் தேவையில்லை என பயிற்சியாளர் பிளெமிங் கூறியுள்ளது கிரிக்கெட் அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னை அணியின் உடற்தகுதி பயிற்சித் திட்டத்தில் யோ யோ டெஸ்ட் இல்லை. அதைவிட உலகத்தரமான உடற்பயிற்சி வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர் எங்கள் அணியில் உள்ளதால், அதற்கு அவசியம் இல்லை. அதனால், அதற்காக நேரம் செலவிட மாட்டோம்” என்று கூறினார்.

Fleming, CSK, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளெமிங்
ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிளெமிங். (CSK)


யோ யோ டெஸ்ட் என்று கூறப்படும் உடல் மற்றும் உளவியல் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பமாட்டோம் - பாகிஸ்தான் அமைச்சர்

உலக அளவில் டிரெண்டான #MSDhoniRoars.. ட்விட்டரை அதிர வைத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

Also Watch...

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...