உலக அளவில் டிரெண்டான #MSDhoniRoars.. ட்விட்டரை அதிர வைத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

#IPL2019: #MSDhoniRoars hashtag on Twitter Top Trending World Wide | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட விவகாரத்தில் சிக்கி மீண்டு வந்ததைக்கூறும் ‘ரோர் ஆப் தி லயன்’ என்ற ஆவணப்படம் நேற்று இணையதளத்தில் வெளியானது.

Web Desk | news18
Updated: March 21, 2019, 8:55 PM IST
உலக அளவில் டிரெண்டான #MSDhoniRoars.. ட்விட்டரை அதிர வைத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!
எம்.எஸ்.தோனி.
Web Desk | news18
Updated: March 21, 2019, 8:55 PM IST
MSDhoniRoars என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டிவிட்டரையே அதிர வைத்தனர்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், 2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 23) சென்னையில் தொடங்க உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகளும் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

MS Dhoni, தோனி
சேப்பாக்கத்தில் தோனி. (CSK)


தொடக்க போட்டியை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தைக் காணவும், குறிப்பாக தல தோனியைக் காணவும் ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கத்தில் குவிந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட விவகாரத்தில் சிக்கி மீண்டு வந்ததைக்கூறும் ‘ரோர் ஆப் தி லயன்’ என்ற ஆவணப்படம் நேற்று இணையதளத்தில் வெளியானது. இதில், தோனி பல்வேறு உருக்கமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன், மொத்தம் 5 எபிசோட்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ஆவணப்படம் முழுவதையும் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தோனியை புகழ்ந்து வருகின்றனர். இதனால், டிவிட்டர் டிரெண்டிங்கில் MSDhoniRoars என்ற ஹேஷ்டேக் உலக அளவில் முதல் இடத்தில் இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ட்வீட்டால் டிவிட்டரையே அதிர்ந்தது.சி.எஸ்.கே.வுக்கு சவால் அளிக்க சென்னை வந்து சேர்ந்தது கிங் கோலியின் படை!

உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு CSK அணி உதவி!

பேட்ட ஸ்டைலில் தோனிக்கு 3டி மோஷன் போஸ்டர்.. CSK ரசிகர்கள் கொண்டாட்டம்!

Also Watch...First published: March 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்