VIDEO: மொத்தமா வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்.. வைரலாகும் தோனியின் சிக்ஸர்!

#IPL2019: #MSDhoni's two monstrous SIXES Against #MumbaiIndians | மலிங்கா ஓவரில் அடித்து ஆடுவதே பல வீரர்கள் திணறும்போது தோனி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டது சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

VIDEO: மொத்தமா வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்.. வைரலாகும் தோனியின் சிக்ஸர்!
பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட தோனி. (BCCI)
  • News18
  • Last Updated: May 8, 2019, 4:51 PM IST
  • Share this:
மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் மலிங்கா வீசிய 19-வது ஓவரில் தோனி தொடர்ச்சியாக 2 பயங்கரமான சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


IPL, Mumbai Indians
சென்னையை வீழ்த்திய இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை. (BCCI)


இந்தப் போட்டியில் சென்னை அணியின் பேட்டிங்கின்போது 19-வது ஓவரை அசுரவேக பந்துவீச்சாளர் லசித் மலிங்கா வீசினார். அந்த ஓவரின் 3-வது மற்றும் 4-வது பந்துகளை எதிர்கொண்ட தோனி தொடர்ச்சியாக 2 பயங்கரமான சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

மலிங்கா ஓவரில் அடித்து ஆடுவதே பல வீரர்கள் திணறும்போது தோனி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டது சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

தோற்றாலும் எனது 'கிங்' தோனிதான்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

#SRHvDC | எலிமினேட்டர் போட்டி: டெல்லி - ஹைதராபாத் பலப்பரீட்சை!

#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்