ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ரசிகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய தல தோனி!

#IPL2019: #MSDhoni's sweet gesture for special fan | சென்னை அணி 2-வது போட்டியில் விளையாடுவதற்காக டெல்லி புறப்பட்டது.

news18
Updated: March 26, 2019, 4:38 PM IST
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ரசிகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய தல தோனி!
தோனி மற்றும் சக வீரர்கள். (IPL)
news18
Updated: March 26, 2019, 4:38 PM IST
சென்னை விமான நிலையத்தில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ரசிகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய தல தோனியை, கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த தாம்சன் ஆனந்த்ராஜ் என்பவரின் மகன் டேவிட். 16 வயதான டேவிட், ஆட்டிஸம் என்று கூறப்படும் மனவளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால், எழுந்து நடக்க முடியாது. இரு சக்கர நாற்காலியில் செல்ல அவருக்கு மற்றொருவரின் உதவி தேவைப்படும்.

டேவிட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகர். தோனி விளையாடும் போட்டிகளை ஒன்றுகூட விடமால் பார்த்துவிடுவாராம். அவருக்கு தோனியை நேரில் பார்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்துள்ளது.

MS Dhoni, தோனி
வலைப்பயிற்சியில் எம்.எஸ்.தோனி. (CSK)


இதுகுறித்து, டேவிட்டின் தந்தை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அணி நிர்வாகம், விமான நிலையத்தில் சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்தது. சென்னை அணி 2-வது போட்டியில் விளையாடுவதற்காக டெல்லி புறப்பட்டது. அப்போது, சென்னை விமான நிலையத்தில் வீரர்கள் செல்லும் பாதையில் டேவிட்டுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, அந்த வழியாக வந்த தோனி, தனது தீவிர ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.மனவளர்ச்சி குன்றிய ரசிகரின் பல நாள் ஆசையை நிறைவேற்றிய தல தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அஸ்வின் செய்தது அவுட்டாக்கியது சரியா? தவறா? கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து!

VIDEO: டேபிள் டென்னிஸ் போட்டியிலும் கலக்கும் தல தோனி!

விக்கெட் எடுத்த அஸ்வின்... கடுப்பான பட்லர்!

Also Watch..First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...