#IPL2019: தோனியா? கோலியா? 23-ம் தேதி தெரிந்துவிடும்!

பெங்களூரு அணியுடன் 23 முறை மோதியுள்ள சிஎஸ்கே அணி 12 வெற்றி, 7 தோல்வியை பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை

#IPL2019: #MSDhoni vs #ViratKohli, New Advertisement Goes Viral | சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் தொடக்கப் போட்டியில் சி.எஸ்.கே - ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளதை முன்னிட்டு, தோனி, கோலி இருவரும் இடம்பிடித்துள்ள புதிய விளம்பரம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி (மார்ச் 23) தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்கப் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

    CSK Return
    மைதானத்தில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


    கூல் கேப்டன் தோனி, அக்ரசிவ் கேப்டன் கோலி ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதும் போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில், ஐபிஎல் நிர்வாகம் தனது ட்வீட்டர் தளத்தில் புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், சென்னை, பெங்களூரு அணிகளின் ரசிகர்கள் தங்கள் ஆதரவை போட்டி போட்டுக்கொண்டு வெளிபடுத்துகின்றனர். இந்தச் சம்பவங்களை தோனி, கோலி ஆகிய இருவரும் கையில் டி கிளாஸ் உடன் மொட்டை மாடி மேல் இருந்து பார்க்கின்றனர். தோனி, கோலி இரண்டும் பெயர்கள் மட்டுமே. யார் கெத்து என்பது மார்ச் 23-ம் தேதி தெரியும் என்று கூறுவதோடு முடிகிறது.



    இந்த புதிய விளம்பரம் இணையளத்தில் வைரலாகி வருகிறது.

    Also Watch...

    Published by:Murugesan L
    First published: