ஸ்டம்பிங்கில் மரணமாஸ் காட்டிய தல தோனி... வைரலாகும் வீடியோ!

#IPL2019: #MSDhoni Two Brilliant #Stumpings Video Goes Viral | டெல்லியை வீழ்த்திய சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. #CSKvDC

ஸ்டம்பிங்கில் மரணமாஸ் காட்டிய தல தோனி... வைரலாகும் வீடியோ!
தோனியின் அட்டகாசமான ஸ்டம்பிங். (BCCI)
  • News18
  • Last Updated: May 2, 2019, 12:18 PM IST
  • Share this:
டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தல தோனி ஸ்டம்பிங்கில் மரணமாஸ் காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரெய்னா 59 ரன்களும், டூ பிளெசிஸ் 39 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.


தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் 15 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சென்னை அணி, கடைசி 5 ஓவர்களில் 77 ரன்கள் குவித்தது.

Dhoni Batting CSK IPL
அதிரடி காட்டிய தோனி. (BCCI)


அடுத்துக் களமிறங்கி டெல்லி அணி, சென்னை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோனி, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் அட்டகாசமாக ஸ்டம்பிங் செய்தார்.



தோனியின் ஸ்டம்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading