ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அம்பயருடன் நோ-பால் குறித்து வாக்குவாதம் செய்ததால் தோனிக்கு 50 சதவீத ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணியில், ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் வெளியேற சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

அரைசதம் அடித்த தோனி. (BCCI)
பின்னர், களமிறங்கிய கேப்டன் தோனி, மறுமுனையில் அம்பதி ராயுடுவுடன் இணைந்து பொறுமையாக விளையாடி ரன்களை எடுத்தார். ராயுடு 47 பந்துகளில் 57 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தோனி தனது 22 அரைசதத்தை பதிவு செய்தார்.
கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் 4-வது பந்தை அம்பயர் நோ-பால் சிக்னல் கொடுத்தார். ஆனால், லெக் அம்பயர் இல்லை எனக்கூறியதால், நோ-பால் கொடுக்கப்படவில்லை. இதனால், கோபம் அடைந்த தோனி, மைதானத்துக்குள் நுழைந்தார். அம்பயர்களிடன் நோ-பால் குறித்து தோனி வாக்குவாதம் செய்து வெளியேறினார். ஆனாலும், நோ-பால் கொடுக்கப்படவில்லை.
இதனால், மைதானத்தில் பரப்பு ஏற்பட்டது. பின்னர் கடைசிப் பந்தில் சாண்ட்னெர் சிக்சர் அடிக்க சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.

அம்பயர் முடிவால் கோபம் அடைந்த தோனி. (BCCI)
இந்நிலையில், ஐ.பி.எல் விதிகளை மீறியதாக தோனிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தோனியை இந்த தவறை முதல் முறையாக செய்ததால் அவருக்குக் குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.பி.எல் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தோனி, அம்பதி ராயுடு அதிரடி! கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி..
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.