Home /News /sports /

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

ஹைதராபாத் வீரர்களுடன் எம்.எஸ்.தோனி. (CSK)

ஹைதராபாத் வீரர்களுடன் எம்.எஸ்.தோனி. (CSK)

#IPL2019: #MSDhoni Came To Ground After #CSK Loss Against #SRH | மைதானத்துக்கு வந்து ஆதரவு அளித்த ரசிகர்களை நோக்கி கையசைத்துவிட்டுச் சென்றார்.

  • News18
  • Last Updated :
    காயத்தால் போட்டியில் இருந்து விலகிய தல தோனி, சி.எஸ்.கே அணி தோல்வி அடைந்த பிறகு மைதானத்துக்கு வந்து எதிரணி வீரர்களுடன் கலந்துரையாடினார்.

    ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. தோனி இல்லாத நிலையில், சுரேஷ் ரெய்னா கேப்டனாக அணியை வழிநடத்தினார்.

    முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, டூ ப்ளெசிஸ் 45 ரன்களும், வாட்சன் 31 ரன்களும் எடுத்தனர்.

    IPL, SRH, சன் ரைசர்ஸ் ஐதராபாத்
    சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி (SRH)


    அடுத்துக்களமிறங்கிய ஹைதராபாத் அணி, பேர்ஸ்டோவ் (61), டேவிட் வார்னர் (50) ஆகியோரின் அதிரடியால் 16.5 ஓவரிகளில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

    தோல்வி அடைந்த பிறகு, மைதானத்துக்கு வந்த தோனி, எதிரணி வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், மைதானத்துக்கு வந்து ஆதரவு அளித்த ரசிகர்களை நோக்கி கையசைத்துவிட்டுச் சென்றார்.





    ஜானி பேர்ஸ்டோ, வார்னர் அதிரடி! சென்னையை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் அணி

    ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?

    ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

    ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

    தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!








    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: Chennai Super Kings, CSK, IPL 2019, MS Dhoni

    அடுத்த செய்தி