முதல் முறையாக ராணுவ இசை உடன் தொடங்கும் ஐ.பி.எல் 2019!

#IPL2019: #Militarybands to perform in #CSKvsRCB opener | ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.

Web Desk | news18
Updated: March 23, 2019, 1:10 PM IST
முதல் முறையாக ராணுவ இசை உடன் தொடங்கும் ஐ.பி.எல் 2019!
ராணுவ இசை உடன் தொடங்கும் ஐ.பி.எல்.
Web Desk | news18
Updated: March 23, 2019, 1:10 PM IST
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் இன்று தொடங்குகிறது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, கோலாகல தொடக்க விழா எதுவுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி நடைபெற உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதுகின்றன.

dhoni, kholi
தோனி மற்றும் கோலி.


சூதாட்டப்புகாருக்குப் பிறகு, தடைவிதிக்கப்பட்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டில் களமிறங்கியது. ஆனால், காவிரி விவகாரத்தால் எழுந்த போராட்டத்தால், சென்னையில் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டிகள், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் போட்டியை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை அணியை பெங்களுரு அணி வென்றதில்லை.

இன்றைய போட்டியில் கிடைக்கும் முழு வருவாயையும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்க உள்ளதாக சென்னை அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குவது வழக்கம். ஆனால், புல்வாமா தாக்குதல் காரணமாக, இந்த ஆண்டுக்கான தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

IPL opening ceremony,
ஐ.பி.எல் தொடக்க விழா. (IPL)


இதற்காக செலவிடப்படும் தொகையை, ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, பாதுகாப்புப் படை அதிகாரிகள் இன்றைய போட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நிதியை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வழங்க உள்ளனர். மேலும், வீரர்களை கவுரவிக்கும் வகையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ராணுவ இசைக் கருவிகள் இசைக்கப்பட உள்ளன.
Loading...
Military Band
ராணுவ இசை.


மைதானத்தில் ரசிகர்களின் உற்சாகம் நிரம்பி வழியும் என்பதால் சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனிடையே ரசிகர்களின் வசதிக்காக சென்னையில் இன்று கூடுதல் மின்சார ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

Also Watch...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626