#MIvRCB | ஹிட்மேன் ரோகித் உடன் கிங் கோலி மோதல்! வெற்றி வாய்ப்பு யாருக்கு..?

#IPL2019: #MIVSRCB PREVIEW, Protagonists, Head to Head | இதுவரை, 24 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. #MIvRCB

news18
Updated: April 15, 2019, 2:10 PM IST
#MIvRCB | ஹிட்மேன் ரோகித் உடன் கிங் கோலி மோதல்! வெற்றி வாய்ப்பு யாருக்கு..?
ரோகித் சர்மா - விராட் கோலி. (BCCI)
news18
Updated: April 15, 2019, 2:10 PM IST
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா மற்றும் கிங் கோலி பலப்பரீட்சை நடந்த உள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 31-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

தொடர் தோல்விகளை துவண்டு கொண்டிருந்த கோலி தலைமையிலான பெங்களூரு அணி, கடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அந்த அணி 2 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த அணி 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

mumbai indians, IPL
மும்பை இந்தியன்ஸ் அணி. (BCCI)


இரு அணிகளின் பலம் vs பலவீனம்:

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த போட்டியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - டி காக் கூட்டணி சிறப்பாக விளையாடியது. தொடர்ந்து அவர்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
Loading...
அதேபோல், பந்துவீச்சிலும் மும்பை அணி முன்னேற்றம் காண வேண்டும். வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் வருகையை அணி எதிர்நோக்கியுள்ளது.

பெங்களூரு அணியில், கடந்த போட்டியில் கோலி - டி வில்லியர்ஸ் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்து நல்ல ஸ்கோரை கொடுத்தனர். மிடில் ஆர்டர் மற்றும் வேகப்பந்து வீச்சில் அந்த அணி முன்னேற்றம் காண வேண்டும்.

Virat Kohli, RCB, IPL
அரைசதம் அடித்த விராட் கோலி. (BCCI)


வெற்றி vs தோல்வி விகிதம்:

இதுவரை, 24 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 15-மும்பையும், 9-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. வான்கடேவில் மும்பை 5 முறையும், பெங்களூரு ஒரேயொரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு வான்கடேவில் நடந்த கடைசி மோதலில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியே வென்றிருந்தது.

உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

ஒற்றை இலக்க ரன்களில் சுருண்ட வீரர்கள்! டெல்லி அணியிடம் தோற்ற ஹைதராபாத்






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...