MIvKXIP | பஞ்சாப்பை பழிதீர்க்குமா மும்பை? புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை!

#IPL2019: #MIvsKXIP PREVIEW, Protagonists, Head to Head | வான்கடே மைதானத்தில் மொத்தம் விளையாடிய 8 போட்டிகளில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

news18
Updated: April 10, 2019, 6:03 PM IST
MIvKXIP | பஞ்சாப்பை பழிதீர்க்குமா மும்பை? புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை!
ரோகித் சர்மா - ரவிச்சந்திரன் அஸ்வின். (BCCI)
news18
Updated: April 10, 2019, 6:03 PM IST
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முந்தைய தோல்விக்கு மும்பை இந்தியன்ஸ் பழிதீர்க்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் 24-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

புள்ளிப்பட்டியலில், பஞ்சாப் அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

மொஹாலியில் நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

MI vs KXIP, IPL
களமிறங்கும் மும்பை - பஞ்சாப் அணிகள். (IPL)


பலம் vs பலவீனம்:

மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் நன்றாக இருந்தாலும், முதல் 3 இடங்களில் இருக்கும் டி காக், ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சிறந்த ஸ்கோரை பதிவு செய்யவில்லை. அணியில் மலிங்கா இல்லாதது ஒரு பின்னடைவுதான்.

ஆனால், கடந்த ஆட்டத்தில் மும்பை அணியில் அறிமுகமான அல்ஜாரி ஜோசப், ஹைதராபாத்துக்கு எதிராக 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். பஞ்சாப் அணிக்கு எதிராகவும் அவர் சாதிக்கலாம்.

Quinton de Kock, Rohit Sharma
டி காக் மற்றும் ரோகித் சர்மா. (MI)


பஞ்சாப் அணியில் பேட்டிங், பவுலிங் இரண்டுமே சிறப்பாக உள்ளது. கிறிஸ் கெய்ல் மிகப்பெரிய பலம். கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஃபார்முக்கு திரும்பியது சிறப்பு. ஆனால், சென்னை அணிக்கு எதிராக 160 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது. கூட்டு முயற்சி பலனளிக்கும்.

வெற்றி vs தோல்வி விகிதம்:

இதுவரை, 23 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. 12-ல் மும்பை அணியும், 11-ல் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிக்கும் ஒரு வெற்றிதான் வித்தியாசம்.

வான்கடே மைதானத்தில் மொத்தம் விளையாடிய 8 போட்டிகளில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டிகளின் முடிவுகளை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட, இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவே தெரிகிறது.

VIDEO: ராஜஸ்தானிலும் தோனிதான் ‘கிங்’.. ஆரவாரத்தில் அதிர்ந்த விமானநிலையம்...!

PHOTOS: Pink சிட்டிக்குச் சென்ற Yellow லயன்ஸ்!




எளிமையின் சிகரமான தல தோனி - சாக்‌ஷி... வைரலாகும் புகைப்படம்...!

கொல்கத்தாவுக்கு ஊமக்குத்து... ஹர்பஜன் போட்ட கலாய் ட்வீட்!

ஹிட்மேனுக்கு காயம்... ஐ.பி.எல் போட்டியால் உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோகும் அபாயம்!

ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை... பதக்கங்கள் பறிப்பு!

VIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா? தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...