ஐ.பி.எல். லீக் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி

ஐபிஎல் 25 வது லீக் போட்டியில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

ஐ.பி.எல். லீக் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி
பொல்லார்ட்
  • Share this:
ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 3 விக்கெட் வீத்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 24-வது லீக் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது. சமபலம் வாய்ந்த மும்பை அணியும், பஞ்சாப் அணியும் பலப்ரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


கிறிஸ் கெய்ல் 36 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டர்களில் 63 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதற்கு பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர், கருண் நாயர், சாம் சுரன் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 197 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 64 பந்துகளில் 100 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது. அதிரடி ஆட்டக்காரர் பொல்லார்ட் நிலைத்து ஆடி பஞ்சாப் அணியின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்தார்.மறுபுறம் விக்கெட்டுகள் இழந்து வந்ததால் மும்பை அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இறுதி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஒவரின் முதல் பந்தில் பொல்லார்ட் சிக்சர் விளாசினார். அதற்கு அடுத்த பந்தில் பவுண்டரி விளாசிய நிலையில் 3வது பந்தில் பொல்லார்ட் ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், அல்ஜாரி ஜோசப் இரண்டு ரன்களை விளாசி மும்பை அணியை வெற்றி பெற செய்தார். மும்பை அணி தரப்பில் அதிகட்சமாக பொல்லார்ட் 31 பந்துகளில் 10 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 83 ரன்களை விளாசினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் 25 வது லீக் போட்டியில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading