ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா மும்பை? இன்று ஹைதராபாத் உடன் மோதல்!

#IPL2019: M51 - #MIvsSRH PREVIEW, Protagonists, Head to Head | அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MIvSRH

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா மும்பை? இன்று ஹைதராபாத் உடன் மோதல்!
மும்பை இந்தியன்ஸ் அணி. (BCCI)
  • News18
  • Last Updated: May 2, 2019, 6:50 PM IST
  • Share this:
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. 3-வது இடத்தில் 14 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும், 4-வது இடத்தில் 12 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் உள்ளன.


Rohit Sharma, ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா. (BCCI)


இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதேபோல், ஹைதராபாத் அணிக்கு எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். ஆனால், வார்னர், பேர்ஸ்டோவ் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

Bairstow, Warner,பேர்ஸ்டோவ், வார்னர்
வார்னர் - பேர்ஸ்டோவ் . (Twitter)
இன்றைய போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்பதால் மும்பைக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளதில், மும்பை 6-போட்டியிலும், ஹைதராபாத் 7-போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தால் பக்கத்தில்கூட போகமாட்டேன்: சீக்ரெட் உடைத்த தோனி!

தங்க மகள் கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு!

ஹிட்மேனின் சாதனையை சமன் செய்த அயர்ன்மேன்... ஐ.பி.எல் வரலாற்றில் புதிய மைல்கல்!

VIDEO | ரசிகர்கள் என்னை ‘தல’ என்றுதான் அழைக்கிறார்கள்: தோனி நெகிழ்ச்சி!

ஸ்டம்பிங்கில் மரணமாஸ் காட்டிய தல தோனி... வைரலாகும் வீடியோ!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading