#MIvCSK | சென்னை, மும்பை அணிகள் மோதிய போட்டிகளின் முழு விவரம்!

Who will win #MIvsCSK Today Prediction? | ஐ.பி.எல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

news18
Updated: April 3, 2019, 3:35 PM IST
#MIvCSK | சென்னை, மும்பை அணிகள் மோதிய போட்டிகளின் முழு விவரம்!
தோனி மற்றும் ரோகித் சர்மா. (BCCI)
news18
Updated: April 3, 2019, 3:35 PM IST
மும்பையில் நடைபெறும் இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் இந்தியாவில் களைகட்டி வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 3-ல் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.

CSK, MS Dhoni
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


ஐ.பி.எல் தொடரில் இரு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், மும்பை அணி 13 போட்டிகளிலும், சென்னை அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றி விகிதங்களின்படி பார்த்தால் மும்பை அணிக்கு வாய்ப்பு கூடுதலாக தெரிகிறது. வான்கடேவில் நடந்த 11 போட்டிகளில் 6-ல் மும்பையும், 5-ல் சென்னையும் வெற்றி பெற்றுள்ளது.

Mumbai Indians, மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி. (BCCI)


இரு அணிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் உள்ளனர். சில தவறான முடிவுகளால் அந்த அணி புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. வான்கடே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 174 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம். கடைசியாக நடந்த மோதலில், சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. அதனால், சென்னை அணியும் 4-வது வெற்றியை எதிர்நோக்கியுள்ளது.
Loading...
Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...