#RCBvKKR | ரசெலின் காட்டடியில் காணாமல் போன பெங்களூரு...!

#RCBvsKKR: #Russell Helps KKR Pull Off a Heist | நடப்பு சீசனில் பெங்களூரு அணி தான் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

news18
Updated: April 6, 2019, 12:10 AM IST
#RCBvKKR | ரசெலின் காட்டடியில் காணாமல் போன பெங்களூரு...!
சிக்ஸர் மழை மொழிந்த ரசெல். (BCCI)
news18
Updated: April 6, 2019, 12:10 AM IST
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்வி அடைந்தது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. நடப்பு சீசனில் தான் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்த பெங்களூரு, முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேல் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். பார்த்தீவ் 25 ரன்களில் வெளியேற, கோலி - டி வில்லியர்ஸ் ஜோடி அதிரடி காட்டியது. கோலி (84) மற்றும் டி வில்லியர்ஸ் (63) ஆகியோர் இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர்.

RCB, Kohli,
அரைசதம் அடித்த கோலி - டிவில்லியர்ஸ். (BCCI)


அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாச, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் (43), உத்தப்பா (33), நிதிஸ் ரானா (37) ஆகியோர் கணிசமான ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. முதல் வெற்றியை பெற்றுவிடலாம் என பெங்களூரு வீரர்கள் நினைத்தனர்.

ஆனால், அடுத்து வந்த ரசெல் பெங்களூரு பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். கண்ணில்பட்ட பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ரசெலின் காட்டடியில் (48) கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம், நடப்பு சீசனில் பெங்களூரு அணி தான் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.



சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி..!

PHOTOS: மைதானத்தில் அமைதி.. டிரெஸிங் ரூமில் சேட்டை.. தோனியின் அட்டகாசம்!


VIDEO: மைதானத்துக்குள் ஹெலிகாப்டரை இறக்கி துப்பாக்கி முனையில் கால்பந்து வீரர் கடத்தல்!

VIDEO: மிதாலிக்கு பந்துவீசிய ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன்!

இதெல்லாம் ஒரு பிட்ச்சா? டெல்லி ஆடுகளத்தை விளாசிய பாண்டிங்!

ஃபோட்டோவை கிழித்த ஆண்டர்சன்... பதிலடி கொடுத்த அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்