#KKRvCSK | இம்ரான் தாஹிர் அபாரம்... கொல்கத்தாவை 161 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது சி.எஸ்.கே!

#IPL2019: #KKRvsCSK Match at #EdenGardens: Tahir Picks Four to Restrict #KKR to 161 | கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வரிசையாக இம்ரான் தாஹிர் சரித்தார். #ChrisLynn #ImranTahir

news18
Updated: April 14, 2019, 6:15 PM IST
#KKRvCSK | இம்ரான் தாஹிர் அபாரம்... கொல்கத்தாவை 161 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது சி.எஸ்.கே!
இம்ரான் தாஹிர்
news18
Updated: April 14, 2019, 6:15 PM IST
இம்ரான் தாஹிரின் அபார பந்துவீச்சால் கொல்கத்தா அணியை 161 ரன்களுக்குள் கட்டுபடுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் எந்த வித மாற்றமும் செய்யப்பட வில்லை. கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. டேன்லி, பிராத்வெய்ட் மற்றும் ஃபெர்குசன் ஆகியோருக்குப் பதிலாக, கிறிஸ் லின், சுனில் நரைன், ஹேரி கர்னி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.



தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்த கொண்டிருக்க, மறுமுனையில் கிறிஸ் லின் அதிரடி காட்டினார். சென்னை அணியின் பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். அவரது விக்கெட்டை எடுக்க முடியாமல் சென்னை பந்துவீச்சாளர்கள் திணறினர்.

51 பந்திகளில் 82 ரன்கள் விளாசிய கிறிஸ் லின் இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இம்ரான் தாஹிரின் அபார பந்துவீச்சால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சென்னை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய இம்ரான் தாஹிர் 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

VIDEO | தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சி.எஸ்.கே வீரர்கள்... வைரலாகும் வீடியோ!

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

தோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்

அப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...