#CSKvKXIP: தோனி - ராயுடு அதிரடி... சி.எஸ்.கே அணி 160 ரன்கள் சேர்ப்பு!

#IPL2019 Live Score: CSK Scored 3 Wickets For 160 Runs In 20 Overs | தொடக்க வீரர் டூ பிளெசிஸ் (54) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். #CSKvKXIP

news18
Updated: April 6, 2019, 5:56 PM IST
#CSKvKXIP: தோனி - ராயுடு அதிரடி... சி.எஸ்.கே அணி 160 ரன்கள் சேர்ப்பு!
பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட தோனி.(BCCI)
news18
Updated: April 6, 2019, 5:56 PM IST
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 160 ரன்கள் எடுத்தது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் 18-வது லீக் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. அதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

ஹாட்ரிக் வெற்றி பெற்ற சி.எஸ்.கே அணி, மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சி.எஸ்.கே களமிறங்கியது.

CSK, Dhoni, Ashwin
டாஸ் போடும் தோனி - அஸ்வின். (BCCI)


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் டூ பிளெசிஸ், ஹர்பஜன் சிங், ஸ்காட் குகேஜ்லிஜென் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன் - டூ பிளெசிஸ் கூட்டணி அதிரடியாக விளையாடியது. வாட்சன் 26 ரன்களில் ஆட்டமிழக்க, டூ பிளெசிஸ் (54) அரைசதம் கடந்து வெளியேறினார்.

Faf du Plessis, CSK, BCCI
அதிரடியாக விளையாடிய டூ பிளெசிஸ். (BCCI)
Loading...
அடுத்து வந்த ரெய்னா 17 ரன்களில் அவுட்டானார். பின்னர், தொடக்க வீரர் இடத்தில் இருந்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பதி ராயுடு மற்றும் கேப்டன் தோனி ஜோடி கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடியது.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை அணி 160 ரன்கள் எடுத்தது.

3 நாள்ல சந்திப்போம்னு கொல்கத்தா ட்வீட்... வச்சு செய்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

ஐ.பி.எல் பரிதாபங்கள்... பவுலர்கள் இல்லாமல் தவிக்கும் சி.எஸ்.கே!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...