#CSKvKXIP: கடைசி ஓவரில் சி.எஸ்.கே த்ரில் வெற்றி!

கெய்ல் ஆட்டமிழந்த கொண்டாட்டத்தில் சென்னை வீரர்கள். (BCCI)

#IPL2019 Live Score: Chennai Super Kings Won by 22 Runs | கடைசி ஓவரில், பஞ்சாப் அணி வெற்றி பெற 26 ரன்கள் தேவைப்பட்டது. #CSKvKXIP

  • News18
  • Last Updated :
  • Share this:
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் 18-வது லீக் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன் - டூ பிளெசிஸ் கூட்டணி அதிரடியாக விளையாடியது. வாட்சன் 26 ரன்களில் ஆட்டமிழக்க, டூ பிளெசிஸ் (54) அரைசதம் கடந்து வெளியேறினார்.

    Faf du Plessis, CSK, BCCI
    அதிரடியாக விளையாடிய டூ பிளெசிஸ். (BCCI)


    தொடக்க வீரர் இடத்தில் இருந்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பதி ராயுடு (21) மற்றும் கேப்டன் தோனி (37) ஜோடி கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை அணி 160 ரன்கள் எடுத்தது.

    பின்னர், களமிறங்கிய பஞ்சாப் அணியில் கெய்ல் (5), மயங்க் அகர்வால் (0) விரைவில் வெளியேறி ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 55 ரன்கள் எடுத்தும், சர்ஃபராஸ் கான் 67 எடுத்தும் அவுட்டாகினர்.

    கடைசி ஓவரில், பஞ்சாப் அணி வெற்றி பெற 26 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடத்துக்கு வந்தது.

    3 நாள்ல சந்திப்போம்னு கொல்கத்தா ட்வீட்... வச்சு செய்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

    Also Watch...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published: