முதல் 6 லீக் போட்டிகளில் மலிங்கா இல்லை... மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி...!

#IPL2019: #LasithMalinga to miss the first six matches for #MumbaiIndians | மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.

news18
Updated: March 23, 2019, 3:22 PM IST
முதல் 6 லீக் போட்டிகளில் மலிங்கா இல்லை... மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி...!
லசித் மலிங்கா.
news18
Updated: March 23, 2019, 3:22 PM IST
மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, முதல் 6 லீக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் இன்று (மார்ச்23) சென்னையில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல் கோப்பையில் வெற்றி அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் உள்ளன. இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன.

IPL Cup, ஐ.பி.எல்
ஐ.பி.எல் கோப்பை.


இந்த முறை, 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. ஆனால், தொடர் தொடங்குவதற்கு முன்பே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மும்பை அணியின் மூத்த மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, முதல் 6 லீக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட இருப்பதால், ஐ.பி.எல் தொடரின் முதல் ஆறு ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று மலிங்கா கூறியுள்ளார்.

Hardik Pandya, ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் கோப்பை உடன் மும்பை அணி. (IPL)
Loading...
அண்மையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு வீரர்கள் உள்ளூர் போட்டிகளிலும் கட்டாயம் விளையாட வேண்டும் என உத்தரவிட்டது. அதனால், அந்நாட்டு அணியின் கேப்டனாக இருக்கும் மலிங்காவால் இதை மீற முடியாது.

சேப்பாக்கத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு... 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

முதல் முறையாக ராணுவ இசை உடன் தொடங்கும் ஐ.பி.எல் 2019!

Also Watch...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...