ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா பஞ்சாப்? ராஜஸ்தானுடன் இன்று மோதல்!

#IPL2019: #KXIPvsRR PREVIEW, Protagonists, Head to Head | இதுவரை, இரு அணிகளும் 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

news18
Updated: April 16, 2019, 6:20 PM IST
ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா பஞ்சாப்? ராஜஸ்தானுடன் இன்று மோதல்!
அஸ்வின் - ரகானே. (BCCI)
news18
Updated: April 16, 2019, 6:20 PM IST
மொஹாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் பின்தங்கியுள்ளது.


லீக் போட்டியில் ராஜஸ்தானை ஏற்கனவே பஞ்சாப் வீழ்த்தி உள்ளதால் கூடுதல் நம்பிக்கையில் அந்த அணி களமிறங்கும்.

KXIP Team, IPL
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. (IPL)


இரு அணிகள் பலம் vs பலவீனம்:

Loading...

பஞ்சாப் அணி செய்த சிறிய தவறுகளால், கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் இருவரும் இருப்பது பெரிய பலம். இருவரும் நடப்பு சீசனில் 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். மயங்க் அகர்வால் தொடர்ச்சியான பங்களிப்பை அளித்தால் பெரிய ஸ்கோரை அடிக்கலாம்.

ராஜஸ்தான் அணிக்கு பெரிய பலம் ஜோஸ் பட்லர். மும்பை அணிக்கு எதிராக நல்ல ஸ்கோர் அடிக்க உதவினார். கேப்டன் ரகானே தனது பங்கிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார். அந்த அணியில் ஆர்செர், ஷ்ரேயாஸ் கோபால் ஆகிய வேகப்பந்து வீச்சாளர் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த தவறுகின்றனர்.

ஜோஸ் பட்லர் மான்கட் அவுட்டாகாமல் அஸ்வின் இடமிருந்து தனது விக்கெட்டை பாதுகாத்துக்கொள்வது அவசியம்.

IPL, Ashwin, Jos Buttler, mankads
பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின். (BCCI)


வெற்றி vs தோல்வி விகிதம்:

இதுவரை, இரு அணிகளும் 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. பஞ்சாப் 8-லும், ராஜஸ்தான் 10-லும் வெற்றி பெற்றதுள்ளது. மொஹாலியில் நடந்த கடைசி 4 போட்டிகளில் பஞ்சாப் 3-ல் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி 4 மோதல்களிலும் பட்லர் அரைசதம் அடித்துள்ளார். இதுவரை, ரகானே 7 போட்டிகளில் 5 முறை டாஸ் ஜெயித்துள்ளார். அஸ்வின் 3 முறை மட்டுமே டாஸ் ஜெயித்துள்ளார்.

இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒரே பலத்துடன் இருந்தாலும், வெற்றி வாய்ப்பு ராஜஸ்தானுக்கு சற்று கூடுதலாக இருப்பதாக வெற்றி விகிதம் கூறுகிறது.

சி.எஸ்.கே-வுக்கு கடல் கடந்து பெருகும் ஆதரவு... கிரிக்கெட் வீரர்கள் உற்சாகம்!

தல தோனியின் ஸ்டைலை பின்பற்றும் ரோகித் சர்மா!

அரசியலால் பிரிந்து நிற்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!

பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது மும்பை அணி!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...