அஸ்வின் செய்த அவுட்... எச்சரிக்கை விடுத்த கொல்கத்தா போலீஸ்!

#IPL2019: #KolkataPolice uses #RavichandranAshwin - JosButtler ‘#Mankad’ incident | ஜெய்ப்பூரில் நேற்று நடந்த 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை, மான்கட் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார்.

அஸ்வின் செய்த அவுட்... எச்சரிக்கை விடுத்த கொல்கத்தா போலீஸ்!
பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின். (IPL)
  • News18
  • Last Updated: March 27, 2019, 4:16 PM IST
  • Share this:
அஸ்வின் செய்த அவுட்டை வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு கொல்கத்தா போக்குவரத்து காவல்துறையினர் நூதனமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஜெய்ப்பூரில் நடந்த 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை, மான்கட் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதில், அஸ்வின் பந்துவீசும்போது நான் ஸ்ட்ரைக்கர் பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றதால், பந்துவீசுவதை பாதியில் நிறுத்திய அஸ்வின் ரன் அவுட் செய்தார்.


IPL, Ashwin, JosButtler, mankads
பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின்.


அஸ்வின் செய்த மான்கட் அவுட், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது.

இந்நிலையில், அஸ்வின் செய்த அவுட்டை வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு கொல்கத்தா போக்குவரத்து காவல்துறையினர் நூதனமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தங்களது ட்விட்டரில், சிக்னலில் கோட்டை தாண்டும் வாகனம் மற்றும் அஸ்வின் செய்த மான்கட் அவுட் ஆகிய இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர்.சிக்னலில் க்ரீஸை கடந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் அந்த புகைப்படம் இருந்தது.

பேட்டிங்கில் கோலிக்கே அட்வைஸ் சொன்ன அனுஷ்கா சர்மா... வைரலாகும் வீடியோ!

பிரபல டென்னிஸ் வீராங்கனையை கத்தியால் குத்தியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

Also Watch...

First published: March 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading