ஆர்.சி.பி பரிதாபங்கள்... தோனியைப் போல் செய்யத் தவறிய கோலி!

#IPL2019: #Kohli Did Not Do Like #Dhoni Vs #KKR | தோனியைப் போல் யோசிக்காமல் கோலி வெற்றியைத் தவறவிட்டார் என கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.

news18
Updated: April 7, 2019, 2:22 PM IST
ஆர்.சி.பி பரிதாபங்கள்... தோனியைப் போல் செய்யத் தவறிய கோலி!
தோனி Vs கோலி.
news18
Updated: April 7, 2019, 2:22 PM IST
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழலை தனக்கு சாதகமாக தோனி மாற்றியதை சென்னை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

அந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு, கடைசி 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை வீசிய பெங்களூரு அணியின் முகமது சிராஜ், 3-வது பந்தை வொய்டாக வீசினார். மீண்டும் அதே பந்தில் புல்டாஸ் நோபால் வீச அந்த பந்தை ரசெல் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

Russell, BCCI
சிக்ஸர் மழை மொழிந்த ரசெல். (BCCI)


சிராஜ், கடந்த ஓவரில் ஒரு புல்டாஸ் நோபால் வீசியதைச் சேர்த்து, 2 முறை புல்டாஸ் நோபால் வீசியதற்காக கேப்டன் கோலியிடம் பவுலரை மாற்றுமாறு அம்பயர் கூறினார். பின்னர் பவுலரை மாற்றினாலும், அந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.

kohli and siraj
முகமது சிராஜ் - விராட் கோலி.


இதேபோன்ற இக்கட்டான சூழல், சேப்பாக்கத்தில் நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஏற்பட்டது. 19-வது ஓவரில் தீபக் சாஹர் தொடர்ந்து 2 புல்டாஸ் நோபால் வீசியதால், அவரை தொடர்ந்து பந்துவீச நடுவர் அனுமதிக்கவில்லை. இதனால், தோனி, சாஹருக்கு அறிவுரை கூறினார். பின்னர், சரியாகப் பந்துவீசிய அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
Loading...
Dhoni, Chahar
தீபக் சாஹருக்கு அறிவுரை கூறும் தோனி. (Twitter)


தோனியைப் போல் யோசிக்காமல் கோலி வெற்றியைத் தவறவிட்டார் என கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.VIDEO | கூல் கேப்டன் தோனியையே டென்சனாக்கிய தீபக் சாஹர்!

முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

"நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...