KKRvSRH | கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தாஅணியில் அதிரடியாக ஆடிய ரஷல் 19 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி 49 ரன்கள் குவித்தார்.

Vijay R | news18
Updated: March 24, 2019, 8:17 PM IST
KKRvSRH | கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணி வீரர் ரஷல்
Vijay R | news18
Updated: March 24, 2019, 8:17 PM IST
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரஷலின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடக்க ஜோடி 118 ரன்களை குவித்தனர். கேப்டனர் வார்னர் அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். ஜானி 39 ரன்களையும், தமிழக வீரர் விஜய் சங்கர் 40 ரன்களையும் விளாசினார். 20 ஓவர் முடிவில் ஹைதாரபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் ரஷல் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் லயன் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்தார். பின்னர் ரானா, உத்தப்பா ஜோடி பொறுமையாக ஆடினர்.

ரானா 68 ரன்களும், உத்தப்பா 35 ரன்களிலும் அவுட்டாகினர். கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் ரஷல் களத்தில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  ரஷலின் அதிரடியால் ஆட்டத்தின் போக்கே மாறியது.

கொல்கத்தா அணி 19 ஓவர்களில் 169 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ரஷல் - கில் ஜோடி அதிரடியாக விளையாடி இலக்கை எட்டியது. பரபரப்பான இந்த போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தாஅணியில் அதிரடியாக ஆடிய ரஷல் 19 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி 49 ரன்கள் குவித்தார்.
First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...