Home /News /sports /

#KKRvRCB | தினேஷ் கார்த்திக்கா? கிங் கோலியா? கொல்கத்தா - பெங்களூரு இன்று மோதல்!

#KKRvRCB | தினேஷ் கார்த்திக்கா? கிங் கோலியா? கொல்கத்தா - பெங்களூரு இன்று மோதல்!

விராட் கோலி - தினேஷ் கார்த்திக். (BCCI)

விராட் கோலி - தினேஷ் கார்த்திக். (BCCI)

#IPL2019: #KKRVSRCB PREVIEW, Protagonists, Head to Head | நடப்பு சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பெங்களூரு நுழைய ஆசைப்பட்டால், வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சாத்தியமாகும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 35-வது லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி, 8-ல் ஒரே ஒரு வெற்றி, 7 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

    முதல் 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்ற கொல்த்தா அணி கடைசி 3 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

    KKR vs KXIP
    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. (IPL)


    இரு அணிகளின் பலம் vs பலவீனம்:

    கடந்த 3 போட்டிகளில் கொல்கத்தா அணி 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது. ஆனால், அந்த அணி 24 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உத்தப்பா, நிதிஸ் ரானா, தினேஷ் கார்த்த்திக் தொடர் பங்களிப்பு அவசியம். அனைத்து போட்டிகளிலும் ஆண்ட்ரே ரசெல் தனது சிறந்த பங்களிப்பை அளித்து வருவது பலம்.

    பெங்களூரு அணியின் மிகப்பெரிய பலவீனம் பந்துவீச்சுதான். டேல் ஸ்டெய்னின் வருகை, அணிக்கு பலம் சேர்க்கும். பேட்டிங்கில் விராட் கோலி, டி வில்லியர்ஸ் மற்றும் பார்த்தீவ் படேல் மட்டுமே சிறப்பாக விளையாடுகின்றனர்.

    RCB Team, BCCI
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. (BCCI)


    வெற்றி vs தோல்வி விகிதம்:

    இதுவரை இரு அணிகளும் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 14-ல் கொல்கத்தாவும், 9-ல் பெங்களூருவும் வென்றுள்ளது. 2017-ல் இருந்து இரு அணிகளிலும் 5 போட்டிகளில் மோதியுள்ளன. ஒன்றில் கூட பெங்களூரு வெற்றி பெறவில்லை.

    நடப்பு சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பெங்களூரு நுழைய ஆசைப்பட்டால், வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சாத்தியமாகும்.

    VIDEO: தல தோனிக்கே பிடித்த ஹெலிகாப்டர் ஷாட்... ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

    சர்வதேச கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்.. ரசிகர்கள் சோகம்!

    தோனி ஸ்டம்புக்குப் பின்னால் இருப்பது எனது அதிர்ஷ்டம்: கோலி புகழாரம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

    விளையாட்டு உலகில் பரபரப்பு... இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..!

    உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு... இந்தியாவை சமாளிக்க புதிய திட்டம்!

    தல தோனி எப்போது அணிக்கு திரும்புவார்? ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

    தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

    ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?

    ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

    தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!








    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: Captain Virat Kohli, Cricket, Dinesh Karthik, IPL 2019, RCB

    அடுத்த செய்தி