#KKRvKXIP | கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

#IPL2019: #KKRvKXIP, #StatisticalPreview, #HeadtoHead, Previous Match XI | இரு அணிகளுக்குமே சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

news18
Updated: March 27, 2019, 6:40 PM IST
#KKRvKXIP | கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. (IPL)
news18
Updated: March 27, 2019, 6:40 PM IST
ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு 6-வது லீக் ஆட்டம் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன.

KXIP
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதல் முறையாக ஜெய்ப்பூரில் வீழ்த்தி சாதனை படைத்தது பஞ்சாப் அணி.


இரு அணிகளுக்குமே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரு அணிகளுக்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் கேப்டனாக இருக்கிறார்கள். இரு அணிகளும் தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியையும், பஞ்சாப் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் வீழ்த்தியுள்ளன.

இரு அணிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடக்க ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தினர். கொல்கத்தாவின் ரசல் 19 பந்தில் 49 ரன்கள் விளாசினார். பஞ்சாபின் கெய்ல் 47 பந்தில் 79 ரன்கள் விளாசினார். அதனால், இன்றைய போட்டி சவால் மிகுந்ததாக இருக்கும்.

Chris Gayle, கிறிஸ் கெயில்
ஐபிஎல் தொடரில் குறைந்த போட்டிகளில் 4000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில்.


வெற்றி விகிதம்:
Loading...
1. இதுவரை இரு அணிகளும் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், கொல்கத்தா 15 வெற்றிகளும், பஞ்சாப் 8 வெற்றிகளும் பெற்றுள்ளன.

2. பாஞ்சாப் அணிக்கு எதிராக 15 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் நரைன் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாஞ்சாப் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் இவர்தான்.

3. ஐ.பி.எல் தொடரில் 50 விக்கெட்டுகளை எடுக்க இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே சுனில் நரைனுக்கு தேவை.

4. ஈடன் கார்டன் மைதானத்தில் 32 போட்டிகளில் 25 முறை கொல்கத்தா அணி சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது.

உத்தேச அணிகள் விபரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கிறிஸ் லின், நிதீஷ் ராணா, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல், ஷுப்மன் கில், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, லோக்கி ஃபெர்குசன்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல். ராகுல், கிறிஸ் கெய்ல், மாயங்க் அகர்வால், சர்ஃபராஸ் கான், மன்தீப் சிங், நிக்கோலஸ் பூரன், ரவிச்சந்திரன் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான், சாம் கர்ரன், முகமது ஷமி, அங்கிட் ராஜ்பூத்.

VIDEO: வாட்சனுடன் மோதிக் கொண்ட இஷாந்த் சர்மா, ரபாடா... பரபரப்பாக இருந்த பெரோஸ் ஷா கோட்லா...!

அஸ்வின் செய்த அவுட்... எச்சரிக்கை விடுத்த கொல்கத்தா போலீஸ்!

பேட்டிங்கில் கோலிக்கே அட்வைஸ் சொன்ன அனுஷ்கா சர்மா... வைரலாகும் வீடியோ!

பிரபல டென்னிஸ் வீராங்கனையை கத்தியால் குத்தியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

Also Watch...



First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...