#KKRvCSK | சென்னையை பழிதீர்க்குமா கொல்கத்தா? ரசெல் பங்கேற்பது சந்தேகம்!

#IPL2019: #KKRvsCSK PREVIEW, Protagonists, Head to Head | கொல்கத்தா ஈடென் கார்டென் மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

news18
Updated: April 14, 2019, 2:25 PM IST
#KKRvCSK | சென்னையை பழிதீர்க்குமா கொல்கத்தா? ரசெல் பங்கேற்பது சந்தேகம்!
தோனி உடன் தினேஷ் கார்த்திக்.
news18
Updated: April 14, 2019, 2:25 PM IST
ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு மும்பைக்கு எதிராக தோல்வி அடைந்தது. இருப்பினும், வெற்றிப் பாதைக்கு திரும்பிய சி.எஸ்.கே மீண்டும் ஹாட்ரிக் வெற்றியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி இரண்டு போட்டிகளில் தோல்விகளில் அடைந்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவியது.

KKR vs KXIP
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. (IPL)


இரு அணிகளின் வெற்றி vs தோல்வி விகிதம்:

ஐ.பி.எல் தொடரில் இரு அணிகளும் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 7-ல் கொல்கத்தாவும், 12-ல் சென்னையும் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டென் மைதானத்தில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி, இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

பலம் vs பலவீனம்:

கொல்கத்தா அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், இன்னமும் சரியான 11 பேரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளது. கடந்த போட்டியில் தொடக்க வீரர்கள் இருவரும் மாற்றப்பட்டனர். அணிக்கு ஆண்ட்ரே ரசெல் பெரிய பலமாக இருக்கிறார்.

இவரைத் தவிர, ராபின் உத்தப்பா அணிக்கு கைகொடுக்கிறார். ஆனால், கடந்த போட்டியில் ரசெலுக்கு காயம் ஏற்பட்டதால், இந்தப் போட்டியில் அவர் பங்கேற்பாரா என உறுதியாக தெரியவில்லை.

சென்னை அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அம்பதி ராயுடு விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். மற்ற வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.

VIDEO | தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சி.எஸ்.கே வீரர்கள்... வைரலாகும் வீடியோ!

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

தோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்

அப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...