சி.எஸ்.கே அபார பந்துவீச்சு... கொல்கத்தா 108 ரன்கள் சேர்ப்பு!

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் லயேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

news18
Updated: April 10, 2019, 11:27 AM IST
சி.எஸ்.கே அபார பந்துவீச்சு... கொல்கத்தா 108 ரன்கள் சேர்ப்பு!
சென்னை அணி
news18
Updated: April 10, 2019, 11:27 AM IST
சேப்பாக்த்தில் நடைப்பெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியின் அபார பந்து வீச்சால் கொல்கத்தா அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றுள்ளன. புள்ளிப்பட்டிலியல் கொல்கத்தா முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது. இதுவரை சேப்பாக்கத்தில் நடந்த 8 போட்டிகளில் சென்னை 6-லும், கொல்கத்தா 2-லும் வெற்றி பெற்றன.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் லயேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து வந்த உத்தப்பா 11 ரன்களும், நரைன் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர்.சிஎஸ்கே அணியின் சிறப்பான பந்துவீச்சால்  கொல்கத்தா அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ரஷல் அதிரடியாக விளையாடினாலும் கொல்கத்தா அணியின் எந்த பேட்ஸ்மேனுடனும் அவரால் பார்ட்னர்சிப் வைக்க முடியவில்லை.இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரஷல் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை தொடர்ந்து  109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...