ரோகித் சர்மா எப்போது வருவார்... பொல்லார்டு தகவல்!

#IPL2019: #KieronPollard gives update on #RohitSharma’s injury | 11 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக ரோகித் சர்மா ஐ.பி.எல் போட்டியில் இருந்து விலகினார்.

ரோகித் சர்மா எப்போது வருவார்... பொல்லார்டு தகவல்!
பொல்லார்டு - ரோகித் சர்மா. (AFP)
  • News18
  • Last Updated: April 11, 2019, 6:12 PM IST
  • Share this:
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் காயத்தால் விளையாடாத ரோகித் சர்மா, அணிக்கு எப்போது திரும்புவார் என பொல்லார்டு கூறியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 24-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி கே.எல்.ராகுல் (100). கிறிஸ் கெய்ல் (63) ஆகியோரின் அதிரடியால் 197 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி, பொல்லார்டின் (83) ருத்ரதாண்டவத்தால் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், அந்த அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.


Kieron Pollard, MI, IPL
டி-20 போட்டிகளில் பொல்லார்டு 602 சிக்ஸர்கள் அடித்துள்ளார். (BCCI)


முன்னதாக, பயிற்சியின்போது கேப்டன் ரோகித் சர்மா, காயமடைந்தார். அதனால், அந்தப் போட்டியில், கேப்டனாக களமிறங்கிய பொல்லார்டு, 31 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

போட்டி முடிந்த பிறகு, பொல்லார்டு பேசுகையில், “ரோகித் சர்மாதான் எப்பவும் அணியின் கேப்டன். நான் கேப்டனாக களமிறங்கியது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே. அடுத்த ஆட்டத்தில் அவர் மீண்டும் அணியில் இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக கேப்டன் பதவியை அவரிடம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.இதன்மூலம், அடுத்த போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பார் என தெரிகிறது.

டி-20 போட்டியில் கெய்லை துரத்தும் பொல்லார்டு!

VIDEO: ஹர்திக், பொல்லார்டு உடன் மோதிய பஞ்சாப் வீரர்!

முக்கியமான சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா!

ஐ.பி.எல் லீக் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading