அஜித்தின் மாஸ் டயலாக் உடன் சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்...!

#IPL2019: #ImranTahir Tweet #Ajith's Mass Dialogue About #CSK Super Won | டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #CSKvDC

அஜித்தின் மாஸ் டயலாக் உடன் சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்...!
இம்ரான் தாஹிர். (BCCI)
  • News18
  • Last Updated: May 11, 2019, 1:05 PM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி குறித்து அஜித்தின் மாஸ் டயலாக்கில் இம்ரான் தாஹிர் செய்த ட்வீட் வைரலாகப் பரவி வருகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் குவாலிஃபையர் 2 போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் சாஹர், ஹர்பஜன் சிங், பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், தாஹிர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அடுத்துக் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் டூ பிளெசிஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினர். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவுக்கு ரன்களைச் சேர்க்க 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாஹிருக்கு ‘கேம் சேஞ்சர்’ விருது வழங்கப்பட்டது. இதனை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி குறித்து அஜித்தின் மாஸ் டயலாக்கில் இம்ரான் தாஹிர் ட்வீட் செய்தார்.



அதில், “எங்களோட சி.எஸ்.கே வாழ்க்கைல ஒவ்வொரு ஐ.பி.எல்-லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும், ஏன் ஒவ்வொரு பாலும் நாங்களா செதுக்கினது டா. எடுடா வண்டியா போடுடா விசில” என்று கூறியிருந்தார்.



இந்த டயலாக்கை ‘பில்லா 2’ படத்தில் அஜித் பேசியிருப்பார். ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான இந்த டயலாக்கை தாஹிர் ட்வீட் செய்திருப்பது வைரலாகப் பரவி வருகிறது.

VIDEO | ஃபீல்டிங் பரிதாபங்கள்: டெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்!

எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்!

டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading