சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

#IPL2019: Important Announcement on #ChennaiSuperKings Team | சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 6) நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (Twitter)
  • News18
  • Last Updated: April 4, 2019, 10:45 PM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் களைகட்டி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், சென்னை அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. அத்துடன், புள்ளிப்பட்டிலில் முதலிடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால், சி.எஸ்.கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


csk vs mi
சென்னை அணியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் மும்பை வீரர்கள். (BCCI)


இதனை அடுத்து, சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 6) நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்துவிட்டன. பின்னர், சேப்பாக்கத்தில் வரும் 9-ம் தேதி நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் உடன் சென்னை மோதுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

MS Dhoni, தோனி
சேப்பாக்கத்தில் தோனி. (CSK)
தற்போது அதற்கான அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், 9-ம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள், 7-ம் தேதி காலை 8.45 மணிக்கு தொடங்கும் என்றும், அதே நேரத்தில் இணைதளத்திலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSK Ticket Sale
சேப்பாக்கத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விபரம்.


காத்திருந்த மும்பை பாட்டி... நேரில் சென்று பார்த்த தல தோனி... வைரலாகும் புகைப்படங்கள்!

VIDEO: கேட்ச் பிடிக்காமல் ரிவியூவ் கேட்ட பாக். வீரர்... கலாய்த்த ரசிகர்கள்!

தோல்வியின்றி வரலாறா... மோதி எழுவோம்... ஹர்பஜன் சிங் ஆவேசம்!

VIDEO: தோனிக்கே மான்கட் அவுட்டா? பல்பு வாங்கிய பாண்டியா!

Also Watch... 



இரட்டைப் பதவி ஆதாயம்: சவுரவ் கங்குலிக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

தொடக்கவீரர்கள் சொதப்பல்! மும்பையிடம் வீழ்ந்தது சென்னை..




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்