தோற்றாலும் எனது 'கிங்' தோனிதான்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

#IPL2019: #HardikPandya posts emotional message for #MSDhoni | முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தோற்றாலும் எனது 'கிங்' தோனிதான்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!
எம்.எஸ்.தோனி - ஹர்திக் பாண்டியா.
  • News18
  • Last Updated: May 8, 2019, 3:50 PM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தாலும் எனது முன்னுதாரணம், எனது ஜாம்பவான், எல்லாமே தோனிதான் என ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில், மும்பை அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவுக்கு பக்கபலமாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


IPL, Mumbai Indians
சென்னையை வீழ்த்திய இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை. (BCCI)


போட்டி முடிந்த பிறகு, தோனி உடன் இருக்கும் புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “எனது முன்னுதாரணம், எனது நண்பர், எனது சகோதரர், எனது ஜாம்பவான்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தாலும் எனது ஜாம்பவான் தோனிதான் என ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியாக கூறியிருப்பது இரு அணி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

#SRHvDC | எலிமினேட்டர் போட்டி: டெல்லி - ஹைதராபாத் பலப்பரீட்சை!

#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்