Home /News /sports /

தோல்வியின்றி வரலாறா... மோதி எழுவோம்... ஹர்பஜன் சிங் ஆவேசம்!

தோல்வியின்றி வரலாறா... மோதி எழுவோம்... ஹர்பஜன் சிங் ஆவேசம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங். (CSK)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங். (CSK)

#IPL2019: #HarbhajanSingh Tweet About #ChennaiSuperKings Loss vs MI | மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.

  • News18
  • Last Updated :
    மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து ஹர்பஜன் சிங் ஆவேசமான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

    ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் களைகட்டி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    இந்தப் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால், சென்னை அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. அத்துடன், புள்ளிப்பட்டிலில் முதலிடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது.

    csk vs miசென்னை அணியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் மும்பை வீரர்கள். (BCCI)

    இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து ஹர்பஜன் தனது ட்விட்டரில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். அதில், “அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும். உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை. மோதி எழுவோம் நாங்கள், தமிழே வெறும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள். @ChennaiIPL @IPL, தோல்வியின்றி வரலாறா” என்று அவர் பதிவிட்டுள்ளார்.



    ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள இந்த ஆவேச வசனங்கள் அண்மையில் வெளியான கே.ஜி.எஃப் படத்தில் இடப்பெற்றிருந்தது. இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    காத்திருந்த மும்பை பாட்டி... நேரில் சென்று பார்த்த தல தோனி... வைரலாகும் புகைப்படங்கள்!


    VIDEO: தோனிக்கே மான்கட் அவுட்டா? பல்பு வாங்கிய பாண்டியா!

    Also Watch... 



    இரட்டைப் பதவி ஆதாயம்: சவுரவ் கங்குலிக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

    தொடக்கவீரர்கள் சொதப்பல்! மும்பையிடம் வீழ்ந்தது சென்னை..




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: CSK, Harbhajan Singh, IPL 2019

    அடுத்த செய்தி