ஐ.பி.எல்-ல எங்களோட தர்பார்தான்... சி.எஸ்.கே வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழில் ட்வீட்!

#IPL2019: #HarbhajanSingh Tamil Tweet About #CSK Won Against #RR | ஹர்பஜன் சிங் ட்வீட்டுக்கு கிரிக்கெட் ரசிகர்களும் பஞ்ச் டலாக்குகளில் பதிலளித்து வருகின்றனர். #RRvCSK

ஐ.பி.எல்-ல எங்களோட தர்பார்தான்... சி.எஸ்.கே வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழில் ட்வீட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங். (CSK)
  • News18
  • Last Updated: April 12, 2019, 5:21 PM IST
  • Share this:
ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.

அடுத்துக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, தோனி 58 ரன்களும், ராயுடு 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் வெற்றிக்கு போராடி தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


Mitchell Santner, Jadeja. CSK
வெற்றிக் கொண்டாட்டத்தில் சாண்ட்னெரை தூக்கிய ஜடேஜா. (BCCI)


சென்னை அணியின் த்ரில் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், “நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா @rajasthanroyals இருக்கலாம், ஆனா அங்கேயும் @IPLல எங்களோட #தர்பார் தான். ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல, @ChennaiIPL தூள் கிளப்பாத இடமுமில்ல. களத்துல மட்டும்தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெள்ளந்தியா சிரிப்போம்” என பதிவிட்டுள்ளார்.அதேபோல், மற்றொரு சி.எஸ்.கே வீரர் இம்ரான் தாஹிர், “போடா நம்மல படச்ச அந்த ஆண்டவனே நம்ம சென்னை பக்கம்தான். எடுடா வண்டிய போடுடா விசில” என ட்வீட் செய்துள்ளார்.இந்த ட்வீட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களும் பஞ்ச் டலாக்குகளில் பதிலளித்து வருகின்றனர்.

#SingaporeOpen | பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்!

VIDEO | நம்ப முடியாத வெற்றி... நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வீடியோ..!

VIDEO | நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? தோனியை தாக்கிய மோசமான பவுன்சர்!

ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...!

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

தோனி, அம்பதி ராயுடு அதிரடி! கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி..


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading