கொல்கத்தாவுக்கு ஊமக்குத்து... ஹர்பஜன் போட்ட கலாய் ட்வீட்!

#IPL2019: #HarbhajanSingh Tweet About #CSK Win Against #KKR | கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹர்பஜன் சிங் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

news18
Updated: April 10, 2019, 2:54 PM IST
கொல்கத்தாவுக்கு ஊமக்குத்து... ஹர்பஜன் போட்ட கலாய் ட்வீட்!
ஹர்பஜன் சிங். (CSK)
news18
Updated: April 10, 2019, 2:54 PM IST
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் தமிழில் பதிவுசெய்து கலாய்த்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, சென்னை அணியின் அபார பந்துவீச்சால், 20 ஓவர்கள் முடிவில் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 17.2 ஓவரிகளில் வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.


CSK vs KKR, IPL
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஜாதவ் - டூ பிளெசிஸ். (BCCI)


ஹர்பஜன் சிங், சென்னை அணியில் இணைந்ததில் இருந்து தமிழில் ட்வீட் செய்து தமிழக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் தமிழில் செய்து கலாய்த்துள்ளார்.

Loading...

அதில், “அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா
@chennaiiplட்ட வாங்காத ஊமக்குத்தா. மூணு நாள்ல சொன்ன மீட்டு இப்ப முச்சந்தில உக்காந்து முக்காடு போடவெச்சுருச்சா #தல வேட்டு #CSKvKKR அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி #CSK மேட்சுனாலே வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா,இப்ப சொல்லு நாங்க கெத்தா” என்று அவர் கூறியுள்ளார்.கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹர்பஜன் சிங் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

ஹிட்மேனுக்கு காயம்... ஐ.பி.எல் போட்டியால் உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோகும் அபாயம்!

ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை... பதக்கங்கள் பறிப்பு!

VIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா? தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...