உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நான்காவது வீரர் யார் களமிறங்க வேண்டும் என ஜாம்பவான்கள் கங்குலி மற்றும் பாண்டிங் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
2019-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. அனைத்து நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகளும் தங்களது வீரர்கள் கிட்டதட்ட உறுதி செய்துவிட்டனர்.
ஆனால், இந்திய அணியில் மட்டும் ஒரு சில இடங்களில் யாரை களமிறக்குவது என்ற குழப்பம் தீர்ந்தபாடில்லை. குறிப்பாக, இந்திய அணியில் 4-வது வீரராக களமிறங்கப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)
இந்நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகருமான ரிக்கி பாண்டிங், “இளம் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்தான் இந்திய அணியின் நான்காவது இடத்துக்கு தகுதியானவர்” என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மற்றொரு பேட்டிங் ஆலோசகருமான சவுரவ் கங்குலி பேசுகையில், “ நான்காவது இடத்துக்கு புஜாராவை பரிந்துரைப்பேன். காரணம், புஜாராவின் ஃபார்ம் தான். அவருக்கு அடுத்து ரிஷப் பண்ட் மற்றும் ராயுடு சிறந்த தேர்வாக இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

தோனி உடன் ரிஷப் பண்ட். (ICC)
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், தோனிக்கு அடுத்தபடியாக 2-வது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ஐ.பி.எல் தொடரில் பேட்டிங்கில் அவர் ஜொலித்தால், பிரதான லெவன் அணியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
2019 ஐ.பி.எல் லீக் சுற்றின் முழு அட்டவணை வெளியானது!
2019 ஐ.பி.எல் தொடரில் அசத்த இருக்கும் 5 அறிமுக வீரர்கள்!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.