VIDEO | முடிஞ்சா மான்கட் அவுட் செய்துபாருங்க... அஸ்வினுக்கு சவால் விடும் பேட்ஸ்மேன்!

#IPL2019: #GallyCricket Batsman Challenge To #Ashwin For #Mankanding | அண்மையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை, அஸ்வின் மான்கட் அவுட் செய்தது சர்வதேச அளவில் பேசப்பட்டது.

news18
Updated: April 7, 2019, 4:24 PM IST
VIDEO | முடிஞ்சா மான்கட் அவுட் செய்துபாருங்க... அஸ்வினுக்கு சவால் விடும் பேட்ஸ்மேன்!
அஸ்வின் மற்றும் சக அணி வீரர்கள்.
news18
Updated: April 7, 2019, 4:24 PM IST
அஸ்வின்... முடிஞ்சா என்னை மான்கட் அவுட் செய்துபாருங்கள் என இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் சவால் விடுத்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், மான்கட் அவுட்டுக்கு மிகவும் பிரபலமானவர்.

அண்மையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை, அஸ்வின் மான்கட் அவுட் செய்தது சர்வதேச அளவில் பேசப்பட்டது.

IPL, Ashwin, JosButtler, mankads
பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின்.


பட்லரை அஸ்வின் மான்கட் செய்தது தவறு என்றும், ஐசிசி விதிமுறைப்படி அஸ்வின் செய்தது சரிதான் என்றும் பல்வேறு விவாதங்கள் இன்னும் நடைபெற்று வருகின்றன. அதற்குள் நாம் செல்லப்போதில்லை.

இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் உபகரணங்கள் செய்யும் கிரே நிக்கோல்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில், “2020-ம் ஆண்டுகளில் இதுபோன்று பேட்ஸ்மேன்கள் செய்ய வேண்டும். இது நம்முடைய வழக்கமான கண்டுபிடிப்புகளில் ஒன்று” என கூறி ஒரு வீடியோவை பதிவிட்டது.

அதில், ஒரு முனையில் இருந்து பந்தை பேட்ஸ்மேன் அடிக்க, முனையில் நான் ஸ்ட்ரைக்கராக இருக்கும் ஒருவர் நீண்ட கம்பை வைத்து ரன் ஓடாமலே கிரீஸை தொட்டுக் கொண்டிருக்கிறார்.
Loading...



இந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்த ஐசிசி, மான்கட் அவுட் குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கிரே நிக்கோல்ஸ் நிறுவனம் 4டி செஸ் விளையாடுகிறது” என குறிப்பிட்டிருந்தது.



இந்த பதிவிற்கு கீழே கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர், மான்கட் அவுட்டிற்கான தீர்வு வந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.



ஆர்.சி.பி பரிதாபங்கள்... தோனியைப் போல் செய்யத் தவறிய கோலி!

VIDEO | கூல் கேப்டன் தோனியையே டென்சனாக்கிய தீபக் சாஹர்!

முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

"நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...