சேப்பாக்கத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு... 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

#IPL2019: Four Stage Tight Security In #Chepauk | கமாண்டோ படை உள்பட மொத்தம் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Web Desk | news18
Updated: March 23, 2019, 2:08 PM IST
சேப்பாக்கத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு... 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!
சேப்பாக்கத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு.
Web Desk | news18
Updated: March 23, 2019, 2:08 PM IST
ஐ.பி.எல். தொடரை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதன் சுற்று வட்டராப் பகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

MS Dhoni vs Virat kohli, IPL 2019
தோனி மற்றும் கோலி. (IPL)


2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டி என்பதால், பல முக்கிய பிரபலங்கள், உயர் அதிகாரிகள் வருவார்கள். மேலும், இரு அணிகளிலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசாம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும் சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மைதானம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமாண்டோ படை உள்பட மொத்தம் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மைதானத்தை சுற்றிலும் சிறப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Chepauk Stadium Security
சேப்பாக்கத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


வீரர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கும் கூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல காவல்துறையினருடன் தனியார் தன்னார்வ தொண்டர்களும் இணைந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மோப்பநாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். அனைத்து ரசிகர்களும் கடும் பாதுகாப்பை கடந்த பிறகே மைதானத்துக்குள் செல்ல முடியும்.
Loading...
முதல் முறையாக ராணுவ இசை உடன் தொடங்கும் ஐ.பி.எல் 2019!

Also Watch...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...