Home /News /sports /

#IPLFinalWeather: இறுதிப்போட்டியில் மழையா? ரசிகர்கள் அச்சம்... ஹைதராபாத் வானிலை நிலவரம்!

#IPLFinalWeather: இறுதிப்போட்டியில் மழையா? ரசிகர்கள் அச்சம்... ஹைதராபாத் வானிலை நிலவரம்!

ஐ.பி.எல் போட்டியில் மழை.

ஐ.பி.எல் போட்டியில் மழை.

#IPL2019Final WeatherReport: Cloudy #Hyderabad Hosts the #GrandFinale #MIvsCSK | இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. #CSKvMI

  • News18
  • 2 minute read
  • Last Updated :
ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியின் இடையே மழை குறுக்கிட வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி 8-வது முறையாக நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

MI VS CSK Preview
தோனி மற்றும் ரோகித் சர்மா. (BCCI)


இதுவரை, இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. அதனால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவலால் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் பல பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்து வருகின்றது.

கோடை மழை.


ஹைதராபாத்தில் இன்று குறைந்தபட்சம் 24 டிகிரியும், அதிகபட்சம் 36 டிகிரியும் வெப்பநிலை இருக்கும், பகலில் மேக மூட்டம் காணப்படும், மதியம் 12.30 மணியிலிந்து மாலை 6.30 மணிக்குள் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நடப்பு ஐ.பி.எல் சீசனில் பெங்களூருவில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மட்டும் மழையால் கைவிடப்பட்டது.

டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிருக்கு தென் ஆப்ரிக்கா அழைப்பு? சி.எஸ்.கே அதிர்ச்சி!

CSK-க்கு இறுதிப்போட்டியில் இப்படியொரு கண்டம் இருக்கு... புள்ளி விவரம் சொல்லும் உண்மை!

 

Also Watch...





VIDEO | ஸிவா தோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

என்னோட பார்வையில் இருந்து தப்பவே முடியாது.. வைரலாகும் தோனியின் ரிவியூ வீடியோ!

அஜித்தின் மாஸ் டயலாக் உடன் சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்...!

VIDEO | ஃபீல்டிங் பரிதாபங்கள்: டெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்!

எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்!

டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Murugesan L
First published:

Tags: Chennai Super Kings, Cricket, CSK, Dwayne Bravo, Hardik Pandya, IPL 2019, Krunal Pandya, Lasith Malinga, MS Dhoni, Rohit sharma, Suresh Raina

அடுத்த செய்தி