2019 ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவு கோடிகளா?

ஐ.பி.எல் கோப்பை.

#IPL2019Final – How much #prizemoney will winning team? | இதுவரை, இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. #CSKvMI

 • News18
 • Last Updated :
 • Share this:
  2019 ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் அணி மற்றும் இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு எவ்வளவு கோடிகள் பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

  ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

  CSK vs MI
  ரோகித் சர்மா - எம்.எஸ்.தோனி.


  இதுவரை, இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 2-ல் மும்பையும், ஒன்றில் சென்னையும் வென்றுள்ளது. அதனால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

  ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் அணி மற்றும் இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிகளுக்கு எத்தனை கோடிகள் பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

  CSK Team, IPL, BCCI
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)


  12-வது ஐ.பி.எல் தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.50 கோடி. அதில், 50 சதவீத தொகை அணிகளுக்கும், மீதமுள்ள தொகை வீரர்களுக்கும் வழங்கப்படும். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத்தொகை அளிக்கப்படும். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அணிக்கு ரூ.12.5 கோடி வழங்கப்படும்.

  இது மட்டுமல்லாமல், 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ.10.5 கோடியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ.8.5 கோடியும் வழங்கப்படும். இதுதவிர, அதிக ரன்கள் அடித்த ஆரஞ்சு கேப் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பர்பில் கேப் வைத்திருக்கும் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், மிகவும் மதிப்புமிக்க வீரருக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.

  11 வருடங்களுக்கு முன்பு, தோனிக்கு சி.எஸ்.கே கொடுத்த விலை இதுதான்! வைரல் ட்வீட்

  #IPLFinalWeather: இறுதிப்போட்டியில் மழையா? ரசிகர்கள் அச்சம்... ஹைதராபாத் வானிலை நிலவரம்!

  டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிருக்கு தென் ஆப்ரிக்கா அழைப்பு? சி.எஸ்.கே அதிர்ச்சி!

  CSK-க்கு இறுதிப்போட்டியில் இப்படியொரு கண்டம் இருக்கு... புள்ளி விவரம் சொல்லும் உண்மை!

  Also Watch...  VIDEO | ஸிவா தோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

  என்னோட பார்வையில் இருந்து தப்பவே முடியாது.. வைரலாகும் தோனியின் ரிவியூ வீடியோ!

  அஜித்தின் மாஸ் டயலாக் உடன் சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்...!

  VIDEO | ஃபீல்டிங் பரிதாபங்கள்: டெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்!

  எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்!

  டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்

  Also Watch...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  Published by:Murugesan L
  First published: