CSK-க்கு இறுதிப்போட்டியில் இப்படியொரு கண்டம் இருக்கு... புள்ளி விவரம் சொல்லும் உண்மை!

#IPLfinal2019: Form, #statistics back #MI against defending champions #CSK in clash of giants | இறுதிப்போட்டியில் 2 முறை சென்னை அணியை வீழ்த்தி கோப்பை வென்றுள்ளது மும்பை அணி. #MIvCSK #CSKvMI

CSK-க்கு இறுதிப்போட்டியில் இப்படியொரு கண்டம் இருக்கு... புள்ளி விவரம் சொல்லும் உண்மை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)
  • News18
  • Last Updated: May 11, 2019, 7:57 PM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கண்டம் இருப்பதாக கடந்த கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் குவாலிஃபையர் 2 போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனை அடுத்து, நாளை ஹைதராபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.


CSK vs MI
ரோகித் சர்மா - எம்.எஸ்.தோனி.


இந்நிலையில், சி.எஸ்.கே அணிக்கு இறுதிப்போட்டியில் கண்டம் இருப்பதாக கடந்த கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மும்பை அணி, நடப்பு சீசனில் குவாலிஃபையர் போட்டி உள்பட சி.எஸ்.கே-வை 3 முறை வீழ்த்தியுள்ளது.

இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடர்களில், மும்பை அணி 4 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி, 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதில், முக்கியமான விவரம் என்னவென்றால் 2 முறை சென்னை அணியை வீழ்த்தி கோப்பை வென்றுள்ளது.
IPL, Mumbai Indians, 2015 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ்
2015 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி  2-வது முறையாக கோப்பையை வென்றது. (Twitter)


சென்னை அணி, 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு வந்து கடந்த ஆண்டு கோப்பையை வென்றது மிகவும் சிறப்பான தருணமாக அந்த அணிக்கு அமைந்தது. 2010-ல் நடந்த இறுதிப்போட்டியில் மும்பையை வீழ்த்தியது சென்னை.

CSK, MS Dhoni, IPL
களத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ். (BCCI)


கடந்த காலங்களில் இறுதிப்போட்டிகளில் சென்னையை அதிகமுறை வென்றுள்ளதால், மும்பை அணியே மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

VIDEO | ஸிவா தோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

என்னோட பார்வையில் இருந்து தப்பவே முடியாது.. வைரலாகும் தோனியின் ரிவியூ வீடியோ!

அஜித்தின் மாஸ் டயலாக் உடன் சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்...!

VIDEO | ஃபீல்டிங் பரிதாபங்கள்: டெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்!

எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்!

டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading