மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முக்கிய மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

தோனி மற்றும் ரோகித் சர்மா. (BCCI)
நடப்பு சீசனில் முதல் குவாலிஃபையர் உள்பட 3 போட்டிகளிலும் சி.எஸ்.கே-வை வீழ்த்தியுள்ளது மும்பை இந்தியன்ஸ். இதுவரை, இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 2-ல் மும்பையும், ஒன்றில் சென்னையும் வென்றுள்ளது. அதனால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முக்கிய மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளார். நடப்பு சீசனில் மும்பைக்கு எதிராக சென்னை அணி அடித்த அதிகபட்ச ரன்கள் 133தான். குறைந்தபட்சம் 109 ரன்கள்.

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட தோனி. (BCCI)
அதனால், சென்னை அணியின் பேட்டிங்கில் இன்று சிறப்பாக செயல்பட வேண்டும். ஒருவேளை முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு கணிசமான அளவு இருக்கும்.
கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். அவர் வீசிய ஒரே ஓவரில் 13 ரன்கள் கொடுத்ததால் அடுத்து ஓவரே கொடுக்கப்படவில்லை. அவரது வாய்ப்பு இன்றைய போட்டியில் குறைவுதான். அவருக்கு பதிலாக பேட்டிங்கில் பலம் சேர்க்க மீண்டும் முரளி விஜய் களமிறக்க அதிக வாய்ப்புள்ளது.
தோனியின் இன்னொரு வழக்கம் என்னவென்றால், வெற்றி பெற்ற அணியில் மாற்றம் செய்யமாட்டார். அதனால், அதே அணியில் களமிறங்கவும் வாய்ப்புள்ளது.
சி.எஸ்.கே உத்தேச லெவன் அணி:
ஷேன் வாட்சன், டூ ப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், முரளி விஜய் / ஷர்துல் தாகூர்.
2019 ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவு கோடிகளா?
11 வருடங்களுக்கு முன்பு, தோனிக்கு சி.எஸ்.கே கொடுத்த விலை இதுதான்! வைரல் ட்வீட்
#IPLFinalWeather: இறுதிப்போட்டியில் மழையா? ரசிகர்கள் அச்சம்... ஹைதராபாத் வானிலை நிலவரம்!
டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிருக்கு தென் ஆப்ரிக்கா அழைப்பு? சி.எஸ்.கே அதிர்ச்சி!
CSK-க்கு இறுதிப்போட்டியில் இப்படியொரு கண்டம் இருக்கு... புள்ளி விவரம் சொல்லும் உண்மை!
Also Watch...
VIDEO | ஸிவா தோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
என்னோட பார்வையில் இருந்து தப்பவே முடியாது.. வைரலாகும் தோனியின் ரிவியூ வீடியோ!
அஜித்தின் மாஸ் டயலாக் உடன் சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்...!
VIDEO | ஃபீல்டிங் பரிதாபங்கள்: டெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்!
எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்!
டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்
Also Watch...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.