Home » News » Sports » CRICKET IPL 2019 ELIMINATOR ITS LUCKY SUNRISERS HYDERABAD VS PLUCKY DELHI CAPITALS MU

#SRHvDC | எலிமினேட்டர் போட்டி: டெல்லி - ஹைதராபாத் பலப்பரீட்சை!

#IPL2019 #Eliminator: It's lucky #SunrisersHyderabad vs plucky #DelhiCapitals | நடப்பு சீசனைப் பொறுத்தவரை இரு அணிகளும் தலா ஒரு லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. #SRHvDC

#SRHvDC | எலிமினேட்டர் போட்டி: டெல்லி - ஹைதராபாத் பலப்பரீட்சை!
கேன் வில்லியம்சன் - ஷ்ரேயாஸ் ஐயர். (BCCI)
  • News18
  • Last Updated: May 8, 2019, 1:46 PM IST
  • Share this:
நடப்பு ஐ.பி.எல் சீசனில் இன்று இரவு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன.

12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


IPL, Mumbai Indians
சென்னையை வீழ்த்திய இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை. (BCCI)


இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 2) சென்னை அணியுடன் மோதும்.

ஐ.பி.எல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் 9-லும், டெல்லி 5-லும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனைப் பொறுத்தவரை இரு அணிகளும் தலா ஒரு லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. மும்பை அணி கொல்கத்தாவை வீழ்த்தியதால், நல்வாய்ப்பாக ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது.
srh, Sunrisers Hyderabad
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. (BCCI)


டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடியை, வார்னர், பேர்ஸ்டோவ் இல்லாத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சமாளிக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading