#CSKvRR | சென்னை அணிக்காக புதிய சாதனையை நோக்கி பிராவோ!

#IPL2019: #DwayneBravo on cusp of major milestone | 2011-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ இணைந்தார்.

news18
Updated: April 1, 2019, 3:32 PM IST
#CSKvRR | சென்னை அணிக்காக புதிய சாதனையை நோக்கி பிராவோ!
டுவைன் பிராவோ.
news18
Updated: April 1, 2019, 3:32 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் புதிய சாதனை படைக்க உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த டுவைன் பிராவோ, சர்வதேச அளவில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவாக இருக்கிறார். 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரின் மூன்று சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார்.

CSK, MS Dhoniசென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)

2011-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ இணைந்தார். 2012-ம் ஆண்டிலேயே 461 ரன்கள் விளாசினார். 2013-ல் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பிராவோ. மைதானத்தில் வெறும் விளையாட்டோடு மட்டுமல்லாமல், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் பிராவோ தவறுவதில்லை.

நடப்பு சீசனில் பிராவோ தான் விளையாடிய 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன், ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் புதிய சாதனை படைக்க உள்ளார். சென்னை அணிக்காக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார்.

Dwayne Bravo, பிராவோ!
விக்கெட் வீழ்த்திய கொண்டாட்டத்தில் பிராவோ. (CSK)


தற்போது, சென்னை அணிக்காக பிராவோ 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பிராவோ 4-வது இடத்தில் இருக்கிறார்.
Loading...
Most Wickets
ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல். (IPL)


குடிபோதையில் கார் ஓட்டி விபத்து... பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன் கைது!

‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

#CSKvRR | சேப்பாக்கத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சி.எஸ்.கே அணியில் என்ன மாற்றம்?

சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

#IPL2019 | ‘யூனிவெர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் புதிய வரலாற்று சாதனை!

Also Watch...



POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:





விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...